பூமியை விட 5 மடங்கு பெரிதான கரும்புள்ளிகள் சூரியனில் கண்டுபிடிப்பு


சூரியனில் பூமியை விட 5 மடங்கு பெரிதான கரும்புள்ளிகள் தோன்றியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சார்ஜா விண்வெளி ஆராச்சி கண்காணிப்பு மையம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. சிறப்பு தொலைநோக்கிகள் மூலமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், 2022ம் ஆண்டளவில் குறித்த கரும்புள்ளிகளால் பூமிக்கு பாதிப்புகள் ஏற்படலாமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. பூமியின் சுற்று வட்டப்பாதையில் உள்ள செயற்கை கோள்கள், குறித்த கரும்புள்ளியால் ஏற்படக்கூடும் சூரிய புயலால் சேதமடையக்கூடுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய புயலால் இதுவரை 28 செயற்கை கோள்கள் சேதமந்துள்ளதாக சார்ஜா விண்வெளி ஆராச்சி கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.