தேர்தல் கடமைகளில் 75 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள்

2020 பாராளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களம் தேர்தல் ஆணைக்குழுவுடன் பேச்சுவாரத்தை நடத்தியுள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்கென பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட படை பிரிவு அதிகாரிகள் 75 ஆயிரம் பேரை பணியில் ஈடுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும் பணிகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொலிஸ் அதிகாரிகள் தமது பணிகளை மேற்கொள்கையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி செயற்படுவோர் மற்றும் சட்டங்களை பின்பற்றாதவர்களுக்கெதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைய செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் இன்றி பயணிப்போருக்கு எச்சரிக்கை வழங்குவதற்கான அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு குறித்த முகக்கவசம் இன்றி பயணித்த பொது இடத்தின் பெயர், நேரம், அவரது பெயர், முகவரி என்பவற்றை குறிப்பில் எடுத்து அவருக்கு எதிரான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். நாட்டில் கொரோனா 2ம் அலை உருவாகுவதை தடுப்பதற்கென பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.