காணிகளை பதிவுசெய்வதற்கென புதியமுறை

காணிகளை பதிவுசெய்வதற்கென புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் அதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பதிவாளர் நாயக திணைக்களம் தெரிவித்துள்ளது. 1864ம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட செயன்முறைகளுக்கமையவே தற்போதும் காணி பதிவு இடம்பெறுகிறது. குறித்த பாரம்பரிய முறையை மாற்றுவதற்கான தேவை காணப்படுவதாக பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்துள்ளார்.

காணி தொடர்பில் இடம்பெறும் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களின் இறுதியில் அனுமதி புத்தகம் போன்ற ஆவணமொன்றை பெற்றுக்கொடுப்பதற்கும் புதிய முறையினூடாக சந்தர்ப்பம் கிடைக்குமென பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்துள்ளார்.