(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் சமுர்த்தி பயனாளிகளுக்கு உதவி வழங்கும் வேலைத் திட்டத்திற்கமைய ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் வழிகாட்டலில் சமுர்த்தி பெறுவதற்கு காத்திருக்கும் பயனாளிகளுக்கு இரண்டாம் கட்டமாக மே மாதத்திற்கான உதவி வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் எட்டு கிராம சேவகர் பிரிவிலுள்ள சமுர்த்தி பெறுவதற்கு காத்திருக்கும் 1671 குடும்பங்களுக்கு இரண்டாம் கட்ட கொடுப்பணவாக ஐயாயிரம் ரூபா கொடுப்பணவு வழங்கப்பட்டு வருகின்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேகவர்கள் ஆகியோர் சகிதம் கலந்து கொண்டு கொடுப்பணவை வழங்கி வருகின்றனர்.
இதன் போது ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவில் கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள சமுர்த்தி உதவி பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள 1671 குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபா வீதம் என்பத்தி மூன்று லட்சத்தி ஐம்பத்தையாயிரம்(8355000) ரூபா வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தெரிவித்தார்.