அங்கொட லொக்காவின் கழுகு நீதிமன்றில் முன்னிலை

மீகொட—நாவலமுல்ல, மயான வீதியிலுள்ள, விலங்கு பண்ணையொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கழுகு, இன்றைய தினம் (31) ஹோமாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துருகிரிய பொலிஸாரால் இந்த கழுகு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. பாதாளக்குழுவின் தலைவரான அங்கொட லொக்காவால் போதைப் ​பொருள்களை விநியோகிப்பதற்காக பயிற்சியளிக்கப்பட்ட இந்த கழுகு, அத்துருகிரிய பொலிஸாரால் நேற்று கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.