கல்முனை - சேனைக்குடியிருப்பில் கனரக வாகனத்தில் சிக்குண்டு சிறுவன் பரிதாபமாக பலி!


சேனைக்குடியிருப்பு பகுதியில் கனரக வாகனம் ஒன்றில் சிக்குண்டு எதிர்பாராதவிதமாக சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இன்று(4) மாலை கல்முனை சேனைக்குடியிருப்பு கிட்டங்கி பகுதியில்  மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்றில் சிக்குண்டு  குறித்த சிறுவன் பலியாகியுள்ளார்.


இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.