களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் இரு கட்சிகளிடையே மோதல்; ஒருவர் வைத்தியசாலையில்


மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் புதன்கிழமை இரவு 9.20 மணியளவில், இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி சம்பவம் புதன்கிழமை இரவு மட்டக்களப்பு தேற்றாத்தீவு கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் போட்டியிடும் சந்திரகுமாரின் அதரவாளர்களுக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்  ஒருவரின் ஆதரவாளர்களுக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் ஒருவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இரண்டாம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ் இரு அணியினரும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.