பாடசாலைகள் நாளை முதல் மீள ஆரம்பம்


கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மேலதிக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளை நாளை முதல் மீளத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாளை முதல் முதலாம் கட்டம் பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன், 11ஆம், 12 ஆம் மற்றும் 13 ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கை சுகாதார விதி முறைகளுக்குக் கீழ் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித் தனர்.

அத்தோடு, நாளைய தினம் 5 ஆம் , 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கும் மற்றும் உயர்தர கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரமே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

இந்நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் சகல பாடசாலைகளும் மீள திறக்கப்படவுள்ளது.

அத்துடன், முதலாம் தரம் தொடக்கம் 13 ஆம் தரம் வரை அனைத்து அரச பாடசாலைகளையும் முழுமையாகத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், பாடசாலைகள் திறப்பது தொடர்பான விழிப் புணர்வு திட்டம் ஒன்றை எதிர்காலத்தில் நடத்தப்படும் என கல்வி இராசாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்தார்.

இந்நிலையில், பாடசாலை மாணவர்களின் தூரத்திற்கு ஏற்ப வகுப்பறை ஏற்பாடு செய்யப்படும் என்றும் பாடசாலை மாணவர்களின் சுகாதாரம் பிரச்சினை தொடர்பாக ஆய்வு செய்யக் குழு ஒன்றை நியமிக்கப் படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் முதலாம் கட்டம் பாடசாலை ஆரம்பிக்கப் படவுள்ளது . இந்நிலையில்5 ஆம், 11ஆம், 12 ஆம் மற்றும் 13 ஆம் தர மாணவர்களின் கல்வி நடவடிக்கை சுகாதார விதி முறைகளுக்குக் கீழ் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் காலை 7.30 முதல் பிற்பகல் 3.30 வரையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், ஏனைய தரத்தில் பயிலும் மாணவர்களுக் கான கல்வி நடவடிக்கைகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள பாடசாலை களைத் தயார் படுத்துவதற்காகக் குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் உப அதிபர்கள் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதிவரை பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நாட்களில் மாணவர்களின் கல்வி செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேர்தல் பணிகளை முன்னெடுக்குமாறும் அதிபர் களுக்குக் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.