மட்டு மாநகர சபை; புனித அந்தோனியார் சிற்றாலய வருடாந்த திருவிழா விசேட திருப்பலியுடன் நிறைவு

(லியோன்)
மட்டக்களப்பு மாநகர சபை வளாகத்தில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியாரின் சிற்றாலயத்தின் வருடாந்த திருவிழா விசேட திருப்பலியுடன் நிறைவுபெற்றது.


மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள் , ஊழியர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாநகர சபை வளாகத்தில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியாரின் சிற்றாலயத்தின் வருடாந்த திருவிழா தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலய பங்கு தந்தை ரமேஷ் கிறிஸ்டி அடிகளாரினால் ஒப்புக்கொடுக்கப்பட்டது. திருவிழாவை தொடர்ந்து புனிதரின் திருச்சுருவ ஆசீருடன் திருவிழா திருப்பலி மிக சிறப்பாக நிறைவுபெற்றது

இந்த திருவிழா திருப்பலியில் மாநகர பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், மாநகர உதவி ஆணையாளர் உதயகுமார் சிவராஜா, மாநகர சபை பொறியிலாளர் சித்திராதேவி லிங்கேஸ்வரன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.