டிக் டாக் செயலியை அமெரிக்காவும் தடை செய்கிறது


மிகவும் பிரபல்யமான சீன செயலியான டிக் டாக் செயலியை இன்னும் 24 மணிநேரத்தில் தடைசெய்யவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த உத்தரவை அறிவிப்பதற்கான நிறைவேற்று அதிகார அவசர சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பீஜிங்கினால் அமெரிக்காவின் ஐ.பி முகவரிகள் திருடப்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில் அமெரிக்கா மேற்படி இந்த முடிவினை அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்தியாவும் சீன செயலிகள் பலவற்றை அண்மையில் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.