மட்டக்களப்பு வீடொன்றில் தீ விபத்து


மட்டக்களப்பு பொலிஸ் விடுதிக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக வீடொன்று முற்றாக எரிந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று (28) இரவு திடீரென ஏற்ப்பட தீ விபத்தினால் குறித்த வீட்டில் உள்ள இரண்டு சிறுவர்கள் உட்பட 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை குறித்த இடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவினர் விரைந்து செயற்பட்டதன் காரணத்தால் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந்துள்ளனர்.

மின் ஒழுக்கின் மூலமாக இத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டாலும் குறித்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.