அபாயநிலை குறித்து உண்மையான தகவல்களை மக்களுக்கு அறிவியுங்கள்!


அசாதாரணமான மரணங்களைக் கட்டுப்படுத்தும் கட்டத்தில் இலங்கை இருப்பதால், அபாயம் குறித்து உண்மையான தகவல்களைச் சுகாதாரத்துறையினர் மக்களுக்கு வழங்க வேண்டுமென்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா அபாய நிலைமை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்கிழமை மாத்திரம் 3 மரணங்கள் பதிவாகின. 5 நாள்களில் 6 மரணங்கள் புதிய கொத்தணிகளால் பதிவாகியுள்ளன.

நாம் அனைவரும் எச்சரிக்கை நிலைமையொன்றுக்கு முகங்கொடுத்துள்ளோம். செவ்வாய்கிழமை இனங்காணப்பட்ட 457 தொற்றாளர்களில் 10 பேர் தவிர ஏனைய அனைவரும் சமூகத்திலிருந்து இனங்காணப்பட்ட தொற்றாளர்களாவர் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல்  தெரிந்துகொள்ள 
  0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள் 
 உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்