கொழும்பு மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை

கொழும்பு மாநகர சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நகரசபை அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார். மாநகர சபையின் பொது உதவித்திணைக்களத்தின் சிரேஷ்ட நிர்வாக உதவியாளருக்கு நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

அதன்படி நேற்று முன்தினம் (14) கொழும்பு மாநகரசபை சபையின் நிதித்திட்டமிடல் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநகர மேயர், மாநகர ஆணையாளர் மற்றும் ஏனைய அனைத்து மாநகர சபை உறுப்பினர்களையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டதாக ருவன் விஜயமுனி மேலும் தெரிவித்தார் .