பரீட்சைக்கு முன்னர் மாணவன் தற்கொலை

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட புன்னியடி பிரதேசத்தில் நேற்று இரவு 19 வயதுடைய மாணவன் தற்கொலை செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். தற்கொலை செய்துகொண்டவர் மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உற்பட்ட கிளிவெட்டி, பாரதிபுரம் பிரதேசத்தை வதிவிடமாக உடைய அ.தனுஷன் எனவும் சாதாரண தர பரீட்சையில் 8A B பரீட்சை முடிவுகளை பெற்று நாளை இடம்பெறவிருக்கும் உயர்தர பரீட்சை எழுத இருக்கும் மாணவர் ஆவார்.

சடலம் தற்போது கிண்ணியா தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் தற்கொலைக்கான காரணங்களை மற்றும் புலனாய்வு செய்யும் நடவடிக்கைகளை சேருநுவர பொலிஸார் மேற்கொள்வதாகவும் பிரேத பரிசோதனையின் முடிவிலேயே தற்கொலைக்கான காரணங்களை வெளியிட முடியும் என சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.