கொரோனாவால் மேலும் ஒருவர் பலி; பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

இலங்கையில் 42 ஆவது கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பாணந்துரை பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்திருந்த நிலையில், பிரேத பரிசோதனையின் போது அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் உறுதி படுத்தப்பட்டுள்ளது.