அக்கரைப்பற்று பொதுச்சந்தை பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொதுச்சந்தையில் வெளிமாவட்ட வியாபாரிகளுடன் நேரடி தொடர்புடைய வியாபாரிகளுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை மட்டக்களப்பு அரசடி தாமரைக்கேணி கோட்டமுனை உப்போடை ஆகிய பொதுச்சுகாதார பிரிவுகளில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தந்தவர்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான PCR பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதனின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுச்சுகாதார பரிசோதகர் குழுவினால் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இப் பரிசோதனை முடிவுகளின் படி பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 47 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என பொது சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் WhatsApp இல் தெரிந்துகொள்ள
0771660248 இந்த இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் Battinews என Save பண்ணுங்கள்
உங்கள் WhatsApp இருந்து JOIN என மேலே குறிப்பிட்ட எமது இலக்கத்துக்கு ஒரு மெசேஜ் அனுப்புங்கள்