மட்டக்களப்பு நாவற்குடாவில் வடிகானில் சிக்கிய நபர் - தீயணைப்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்பு
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள நாவற்குடா பகுதியில், வீதியின் குறுக்கே அமைந்துள்ள வடிகானுக்குள் சனிக்கிழமை (13) மாலை 5.30 மணியளவில் சிக்கிய நிலையில் தீயணைப்பு படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாவற்குடா கத்தாமர பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியை ஊடறுத்து அமைக்கப்பட்ட வடிகானுக்குள் நபரொருவர் உள் நுழைந்ததை கண்ட பொதுமக்கள் நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராத நிலையில் பொலிஸார் மற்றும் தீயணைக்கும் படை பிரிவுக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாநகரசபை தீயணைப்பு படையினரும் காத்தான்குடி பொலிஸாரும் சென்று கால்வாய்க்குள் சிக்கியவரை மீட்கும் பணியை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் தீயணைக்கும் படையினர் சுமார் 2 மணித்தியாலத்துக்கு மேலாக போராட்டத்தின் மத்தியில் இரவு 7.30 மணியளவில் வடிகான் சிக்கியவரை பாதுகாப்பாக மீட்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவர் அந்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நேற்று முன்தினம் சிறையில் இருந்து விடுதலையான சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என பொலிசரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.








.jpeg)
.jpeg)



