கிழக்கில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்தது ! அம்பாறை 400 தொற்றாளர்கள் !


( இரா. சயனொளிபவன்  )

கிழக்கு மாகாணத்தில் பேலியகொட மீன்சந்தை கொத்தனிக்கு பின்னரான   கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 515  ஆக அதிகரித்துள்ளது .  

இதுவரை அக்கரைப்பற்று   பொலிஸ்  பிரிவில் மாத்திரம் 306 கொரோன தொற்றாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளனர் . 

மாகாணத்தில் ஐந்து சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டு இவர்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.
இதுவரை 
அம்பாறை மாவட்டத்தில்  -400
மட்டக்களப்பு மாவட்டத்தில்  - 97
திருகோணமலை மாவட்டத்தில் - 18

அனைத்து துறையினரும் இந்த தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு இயலுமான செயற்பாடுகளை முன்னெடுத்தவருகின்றனர். இருந்தபோதிலும் தொற்றுக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றது.தொற்றுடன் தொடர்புபட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றது

  • அம்பாறை மாவட்டம் - 400 தொற்றாளர்கள்  
அக்கரைப்பற்று - 241
அட்டாளைச்சேனை -49
ஆலையடிவேம்பு  - 16
சாய்ந்தமருது - 17
திருக்கோவில் -9
பொத்துவில் - 9
கல்முனை தெற்கு -9
கல்முனை வடக்கு - 6
சம்மாந்துறை - 7
இறக்காமம் - 11
காரைதீவு - 2
நாவிதன்வெளி - 2
நிந்தவூர் -2
அம்பாறை - 4
உஹன - 5
தமன - 4
பதியத்தலாவ - 3
மகா ஓயா - 1
தெஹியத்தகண்டிய - 3 

மட்டக்களப்பு மாவட்டம்  - 97 தொற்றாளர்கள்  

  • கோறளைப்பற்று மத்தி - 60
  • ஏறாவூர் - 10 
  • மட்டக்களப்பு - 8
  • காத்தான்குடி - 4
  • பட்டிப்பளை - 3
  • வெல்லாவெளி - 2
  • ஓட்டமாவடி - 1
  • களுவாஞ்சிகுடி - 2
  • ஆரையம்பதி - 1
  • கிரான் - 1
  • வாழைச்சேனை -4 
திருகோணமலை  மாவட்டம்  - 18 தொற்றாளர்கள்  

திருகோணமலை - 7
மூதூர் - 6
தம்பலகாமம் -2
குச்சவெளி - 1
உப்புவெளி - 2 

.