மட்டக்களப்பில் அதிகரித்துவரும் கொரோனா: மொத்த பாதிப்பு 400ஐ கடந்தது!மட்டக்களப்பில் கடந்த 24 மணிநேரத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 420 அதிகரித்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். 

 இதன்படி, காத்தான்குடி, ஆரையம்பதி, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் என அவர் இன்று (புதன்கிழமை) குறிப்பிட்டுள்ளார். 

 இவர்களில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஊழியர்கள் 12 பேர் என்பதுடன், காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி சுகாதாரப் பிரிவுகளில் தலா நால்வரும் வெல்லாவெளி சுகாதாரப் பிரிவில் மூவரும் களுவாஞ்சிக்குடி சுகாதாரப் பிரிவில் ஒருவரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

 இதேவேளை, மட்டக்களப்பில் இதுவரை தொற்று கண்டறியப்பட்ட 420 பேரில் 145 பேர் குணமடைந்துள்ளதுடன் நால்வர் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 மட்டக்களப்பில் எழுமாறாக பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு மாவட்டம் - தொற்றாளர்கள் விபரம் 
வாகரை - 1
ஓட்டமாவடி -39
வாழைச்சேனை - 7
செங்கலடி - 1
ஏறாவூர் -19
மட்டக்களப்பு -44
வவுணதீவு - 1
காத்தான்குடி  - 163
பட்டிப்பளை -6
வெல்லாவெளி -11
களுவாஞ்சிகுடி -  35
ஆரையம்பதி -12
கோறளைப்பற்று மத்தி -71
கிரான் - 3