கிழக்கில் கடந்த 12 மணித்தியாலத்தில் 47 பேருக்கு கொரோனா ! மொத்த எண்ணிக்கை 1734 ஆக அதிகரிப்பு

 (இரா.சயனொளிபவன் )

கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணித்தியாலத்தில் 47  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது .

இன்றைய தொற்றாளர்கள் விபரம்
கல்முனை தெற்கு - 19 
சாய்ந்தமருது - 4
மட்டக்களப்பு - 6
காத்தன்குடி - 3
வெல்லாவெளி - 3
அம்பாறை - 2
தமன - 2 
கிண்ணியா - 8 
 
இதன்படி, கிழக்கு மகாணத்தில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1734 ஆக அதிகரித்துள்ளது
மட்டக்களப்பு மாவட்டம் -413
அம்பாறை மாவட்டம் -1087
திருகோணமலை மாவட்டம் -234

இதுவரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது