கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்வது கட்டாயமா?


கொவிட் தடுப்பூசியை வற்புறுத்தி வழங்குவதில்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க தெரிவித்தார்.

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக மக்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் குறித்த தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக அவர்களிடம் கையொப்பம் பெற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் மக்களை தெரிவு செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்