மட்டக்களப்பில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி ! மாவட்டத்தில் இதுவரை 6 பேர் பலி


(இரா.சயனொளிபவன்) 

மட்டக்களப்பு நகரின் மூர் வீதியினைச் சேர்ந்த 75 வயதுடைய பெண் ஒருவர் இன்று கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள தாக கிழக்கு மாகாண சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 15.01.2021 வெள்ளிக்கிழமை அன்று மட்டக்களப்பு மாநகரசபை பொதுச்சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியினைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது .
குறித்த குடும்பத்தில் உயிரிழந்த முதியவரின் மனைவி உட்பட 5 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கபட்டு வந்த நிலையில் உயிரிழந்த முதியவரின் 75 வயதுடைய மனைவி இன்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
(மட்டக்களப்பு - 2 , வவுணதீவு - 1 , காத்தான்குடி - 3 )