P2P பேரணி வீண்வேலை ! தமிழர் பிரச்சனைகளை பிரதமர் மகிந்த ஊடாக தீர்க்கலாம்


பி2பி பேரணி தேவைக்கில்லாத ஒன்று. வீண்வேலை. அரசாங்கம் தமிழ்மக்களுக்கு உதவஇருக்கின்றகாலகட்டத்தில் இவையெல்லாம் தேவையா? இதைவிட கதிர்காம பாதயாத்திரையில் செல்லலாம்.

இவ்வாறு கருணாஅம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் காரைதீவில் தெரிவித்தார்.

தேர்தல் முடிந்த கையோடு அம்மானைக்காணவில்லை என பலர் விரக்தியிலிருந்ததுண்டு ஒன்றுமே செய்யவில்லை என்றும் கூறினார்கள். உண்மை அரசாங்கம் இப்போதுதான் நிலையானகட்டத்திற்குவந்துள்ளது. இனி நாம் நிறைய வேகைளை முடிக்கலாம். கொழும்பிற்குச்சென்று பல அமைச்சர்களையும் சந்தித்துவருகிறேன். விரைவில் நல்லவை நடக்கும்.

கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தரமுயர்த்தல் தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்சவிடம் பேசியுள்ளேன். விரைவில் நல்ல பதிலைஎதிர்பார்க்கலாம்.