திருகோணமலை, கந்தளாய் சீனி ஆலை காட்டுப் பகுதியில் யானையின் உடலம் மீட்பு!



திருகோணமலை, கந்தளாய் சீனி ஆலை காட்டுப் பகுதியில் காட்டு யானையொன்று இறந்த நிலையில், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (13) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி காட்டுப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றவர்களால் வழங்கபட்ட தகவலுக்கமைய, இறந்த காட்டு யானையின் உடலத்தை, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

20 வயதுடைய காட்டு யானையொன்றே இறந்துள்ளதாகவும் நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளதா அல்லது ஏதாவது காயங்கள் காரணமாக இறந்துள்ளதா போன்ற பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.