
இலங்கையில் தென்கிழக்காக வங்காளி விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட ஆழ்ந்த தாழமுக்கமானது (Deep Depression) கடந்த 06 மணித்தியாவத்தில் மணிக்கு 15km/h வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (09.01.2025/04.00) தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.
இது பொத்துவில் பிரதேசத்தில் இருந்து தென்கிழக்காக 230km தூரத்திலும்,
மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து தெற்கு-தென் கிழக்காக 300km தூரத்திலும்,
திருகோணமலையிலிருந்து தெற்கு-தென் கிழக்காக 370km தூரத்திலும்,
யாழ்ப்பாணத்திலிருந்து தென்கிழக்காக 550km தூரத்திலும் தற்போது காணப்படுகின்றது.
இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தென் மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தை ஊடறுத்து,
நாளைய தினம் பிற்பகல் 05.30 மணிக்கும் இரவு 11.30 மணிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில்,
அம்பாந்தோட்டை பகுதிக்கும் மட்டக்களப்பிற்கும் இடையான பிராந்தியத்தின் ஊடாக நகர்ந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணத்தினால் நாட்டில் முக்கியமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களில் சற்று பலமான காற்றுடன் மழை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
K.Sooriyakumaran








.jpg)



.jpeg)