திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்


திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் 
செயலக கேட்போர்கூடத்தில் நேற்று  புதன்கிழமை (3) இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யு.டீ.வீரசிங்கவின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்,
திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் ஆர். கமல்ராஜன், ஆகியோரின் பங்குபெற்றலுடன் இடம்பெற்றது.

வட்டமடு மேய்ச்சல் தரைப்பிரச்சினை, மீள்குடியேற்ற கிராமங்களுக்கான விவசாய கிணறுகள், குடிநீர், தெரு மின்சார இணைப்பு, கிராமிய பாலங்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், உள்ளூர் வீதிகள், வடிகான்கள், காஞ்சிரங்குடா நெற்களஞ்சியசாலை புனரமைப்பு, வன இலாக பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் யானை வேலி அமைத்தல், காணி, காணி ஆவணங்கள்,விவசாயம், சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், குளங்கள் புனரமைப்பு, வீட்டுத்திட்டம், ஆலய புனரமைப்பு போன்ற பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டு, தீர்வுகளும் இதன்போது பெற்றுக்கொடுக்கப்பட்டது.

பிரதேச சபை உறுப்பினர்கள், அரச நிறுவன தலைவர்கள், பிரதானிகள் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.