அமெரிக்காவின் கவலை குறித்து மங்கள சமரவீர கருத்து!


யாழ். முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைது செய்யப்பட்டமை தொடர்பாக கவலையடைவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகர காவல் படை உருவாக்கப்பட்ட விடயம் தொடர்பாக நீண்டநேர விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட அவர் யாழ்ப்பாணம் நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், அனைவரினதும் அடிப்படைச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதேவேளை சட்டத்தின் வலுவான ஆட்சி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த வழியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, விடுதலை புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முயன்றதாக கொழும்பு முதல்வர் மீது குற்றம் சாட்ட முடியுமா என கேள்வி யெழுப்பியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “நகர சபை காவல் படையின் சீருடை தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதவேளை கொழும்பு நகராட்சியின் காவல் படையினரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சீருடைகளை அணிகின்றார்கள்.

இந்நிலையில் கொழும்பு முதல்வர் விடுதலை புலிகள் அமைப்பிற்கு புத்துயிர் அளிக்க முயன்றார் என குற்றம் சாட்டப் போகின்றோமா? என கேள்வியுடன் மங்கள சமரவீர பதிவிட்டுள்ளார்.

. .