புத்தாண்டை முன்னிட்டு சமுர்தி பயனாளர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நற்செய்தி!


புத்தாண்டை முன்னிட்டு சமுர்தி பயனாளர்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுறுத்தலின் படி இந்த நிவாரண கொடுப்பனவு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அறிக்கையொன்றினை வெளியிட்டு அதனை குறிப்பிட்டுள்ளார்.