ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜகத் குமார மீது முட்டைத் தாக்குதல்!ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜகத் குமார மீது முட்டைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாதுக்க அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இன்று கலந்துகொண்ட ஜகத் குமார எம்.பிக்கும், சீதாவ்க பிரதேச சபை உறுப்பினர்கள் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையேதான் இந்த முட்டைத் தாக்குதலும் நடத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் அங்கிருந்து புறப்பட்ட வாகனம் மீதே முட்டைகளைக் கொண்டு சிலர் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.