தீவிரவாதத்தைப் பரப்பிய நபர்களின் மடிக்கணினிகள் தொடர்பாக விசாரணை


வெளிநாடுகளிலிருந்து இணையவழியூடாக தீவிரவாதத்தைப் பரப்பிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரினதும் மடிக்கணினிகள் தொடர்பாக விரிவான விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த மடிக்கணினியிலிருந்து தீவிரவாதத்துடன் தொடர்புபட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.