மட்டக்களப்பு சின்ன ஊரணியில் வசதி குறைந்த குடும்பம் ஒன்றிற்கு வீடு வழங்கி வைப்பு

 


மட்டக்களப்பு சின்ன ஊரணியில் உள்ள குடும்பம் ஒன்று வீடு இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளனர். குறித்த குடும்பத்தின் பெண் வீட்டு வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தில்  வறுமையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

இக் குடும்பத்தின் நிலைமையை அறிந்து அவுஸ்திரேலியாவில் வசிக்கும் மட்டக்களப்பை சேர்ந்த சுபா, மோகன், இந்திரா, சாந்தி , பிரபா அவர்களின் நிதி உதவியில் தங்கபாக்கியம் இல்லம் எனும் பெயரில்  இவ் புதிய வீடு  வழங்கப்பட்டுள்ளது. 

சட்டத்தரணி  வினோபா இந்திரன் பங்குபற்றுதலுடன் குறித்த வீடானது சின்ன ஊரணியை சேர்ந்த குடும்பத்திற்கு கையளிக்கப்பட்டது.

குறித்த உதவியை செய்தவர்களுக்கு குடும்பத்தினர் தங்களது நன்றிகளை தெரிவித்திருந்தனர்  .