மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று வியாழக்கிழமை 114 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்தார்.
126 பேர் மரணம் !
கிழக்கில் இதுவரை 126பேர் மரணித்துள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடிய 72பேரும், அம்பாறைப்பிராந்தியத்தில் 16 பேரும் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 பேரும் , கல்முனைப்பிராந்தியத்தில் 13 பேரும் மரணித்துள்ளனர்.
கிழக்கில் முதலிரு அலைகளில் 26பேர் பலியாகியிருந்தனர். ஆனால் மூன்றாவது அலையில் இதுவரை 100பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிழக்கிலுள்ள 10 கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 783 பேர் சிகிச்சைபெற்றுவருகின்றனர்

மட்டக்களப்பு - 12
வவுணதீவு- 16
காத்தான்குடி -15
களுவாஞ்சிகுடி -08
ஆரையம்பதி -11
வாழைச்சேனை - 12
கோறளைப்பற்று மத்தி - 14
செங்கலடி - 7
ஏறாவூர் -4
ஓட்டமாவடி - 4
வெல்லாவெளி -03
கிரான் -02
பட்டிப்பளை -06
மேலும் கடந்த 24 மணித்தியாலத்தில் கிழக்கு மாகாணத்தில் 173 பேர் கொரோனா தொற்றுக்குளாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது