மட்டக்களப்பில் 2 காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்பு!



(ரூத் ருத்ரா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 2 காட்டு யானைகள் உயிரிழந்த நிலையில் அவற்றின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பிரதேச பொலிசார் தெரிவித்தனர்.

வாகரை பொலிஸ் பிரிவின் கதிரவெளி வயல் பிரதேசத்திலும் மற்றையது ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கரடியனாறு கித்துள் பிரதேசத்திலும் இவ் யானைகளின சடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளது.

கிரான் பிரதேச வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உடற் கூற்றாய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் அவற்றினை அடக்கம் செய்துள்ளனர்.

அவை இறந்தமைக்கான காரணத்தினை கண்டறிவதற்காக அவற்றின் மாதிரிகளை உடற் கூற்றாய்விற்காக எடுத்துச் சென்றுள்ளனர்.