`13 ஆம் திகதி நாட்டை திறப்பது கவனம்`



எதிர்வரும் 13ஆம் திகதி நாட்டை திறப்பதாயின், அதற்கு முன்னர் உரிய வகையில் திட்டங்களை முன் கூட்டியே உருவாக்கி, அதனை பகிரங்கப்படுத்துவது பொருத்தமான என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (8) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், கொரோனா பரவலைக் கட்டப்படுத்துவதற்காக ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது இந் நிலையில், ஊரடங்கை நீக்கி நாட்டை இந்த
மாதம் 13ஆம் திகதி தொடக்கம் திறப்பதாயின் அன்றைய தினம் சமூக,
பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய முறை குறித்து,
அந்தந்த பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் திட்டமிட்டு அதனை
பகிரங்கப்படுத்த வேண்டும்.

அவ்வாறு பகிரங்கப்படுத்தினால் நாட்டைத் திறப்பதற்கு தகுந்த சூழ்நிலை உள்ளதாக திருப்தியடையலாம். நாடு திறக்கப்பட்டதும் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள், அதனை எவ்வாறு சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய, முன்னெடுப்பதென திட்டமிட்டு, அதனை செயற்படுத்துவதற்கு தயாராக இருந்தார்கள் என்றால், நாட்டை திறப்பதில் பிரச்சினை இல்லை என்றார்.

அவ்வாறில்லை என்றால் நாட்டை திறப்பதால் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஏற்படும். நாட்டை திறப்பதனுடாக முன்னெடுக்கப்படும் சமூகப் பொருளாதார செயற்பாடுகளால் கொரோனா வைரஸ் நாட்டில் மீண்டும் பரவாதிருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.