பால்மா வேண்டும் என்றால் 6 யோகட்டுகளை வாங்க வேண்டுமாம்



பால்மா கொள்வனவு செய்வதற்கு 6 யோகட்டுகளை கொள்வனவு செய்யுமாறு சில வர்த்தகர்கள் நிர்ப்பந்திப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

பால்மா பக்கட்டின் விலையினை காட்டிலும் 6 யோகட் கோப்பைகளின் விலை அதிகம் என்பதால் பொதுமக்கள் பாரிய அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதனால் அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்