திருமணம் உட்பட பல்வேறு விருந்துபசாரங்களுக்கு தொடர்ந்தும் கட்டுப்பாடுபொதுச்சுகாதார பரிசோதகர் சங்கத்தின் ஆலோசனை சுகாதார வழிகாட்டல்களை மீறி திருமணம் உட்பட பல்வேறு விருந்துபசாரங்களை நடத்துவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொவிட் தொற்று நோய்க்கான ஆபத்து இன்னும் குறையவில்லை என்று கூறினார்.

தற்போதைய நிலைமையைப் புரிந்து கொண்டு முறையான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

சுகாதார வழிகாட்டல்கள் வழங்கப்பட்ட போதிலும் பண்டிகை களை நடத்த அனுமதி கோரி அதிகளவு மக்கள் தினமும் சுகாதார மருத்துவ அதிகாரியின் அலுவலகங்களுக்கு வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.