பால்மாவிற்கான புதிய விலை அறிவிப்பு!கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ள நிலையில், பால் மாவிற்கான புதிய விலைகளை பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவை 350 ரூபாவாலும், 400 கிராம் பால் மாவை 140 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

இதனால், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மா பக்கட்டின் விலை 1,300 ரூபாவாகவும், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 520 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

எனினும், நிதி அமைச்சினால் ஏதேனும் வரி அறிவிக்கப்படும் பட்சத்தில், பால் மாவிற்கான விலை மேலும் அதிகரிக்கும் என அவர் தெரிவிக்கின்றார்.