(சித்தா)
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட அதிகஷ்டப் பிரதேசமான ஐயங்கேணி பகுதியைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், வினாவிடைப் புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகள் போன்றவை சிடாஸ் கனடா - ஸ்ரீலங்கா அமைப்பினால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது ஐயங்கேணி பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.எஸ்.சசிதரன் அவர்களும் பாரதிபுரம் மாதர் கிராம அபிவிருத்தி சங்க தலைவியும் வருகைதந்திருந்ததுடன் குறித்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் சமூகமளித்திருந்தனர். மேலும் சிடாஸ் ஸ்ரீலங்கா அமைப்பின் சார்பில் தலைவர் க.பாஸ்கரன் செயலாளர் அ.சுகுமாரன் மற்றும் எஸ்.வீ சுவேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.