மற்றுமொரு பொருளுக்கான விலை நேற்று முதல் அதிகரிப்பு!டயில்களுக்கான (TILE) விலை நேற்றிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக டயில் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பிட்ட சில டயில்களுக்கான விலை 50 ரூபா முதல் 250 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள், ட்ரூ சிலோனுக்கு குறிப்பிட்டனர்.

குறிப்பாக கருப்பு நிற டயில்களின் விலைகளே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சில டயில் வகைகளுக்கான விலைகள் 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

அத்தியாவசிய பொருட்களுக்கான விலை அதிகரிப்பின் தாக்கத்தை அனைவரும் உணர்கின்ற போதிலும், இவ்வாறான பொருட்களின் விலை அதிகரிப்பு வெளிவருவதில்லை என வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வெளிநாட்டு டயில் வகைகள் கடந்த இரு வருட காலமாக தடை செய்யப்பட்டுள்ள பின்னணியில், உள்நாட்டு டயில் வகைகளே சந்தையில் அதிகளவில் காணப்படுகின்றன.

டயிலுக்கான கட்டுப்பாட்டு விலை இல்லாமையினால், உற்பத்தி நிறுவனங்கள் தமக்கு தேவையான விலைகளில் டயில்களை விற்பனை செய்து வருவதாகவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்