கிழக்கு மாகாண ஆங்கில ஆசிரியர் போட்டிப் பரீட்சைக்கான உளச்சார்பு பரீட்சை திகதி அறிவிப்பு

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங் களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3- I(இ) தரத்துக்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப்பரீட்சை கடந்த 14.08.2021ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்து பிற்போடப்பட்டது.

குறித்த உளச்சார்பு பரீட்சையானது எதிர்வரும் 30.10.2021ஆம் திகதி மீண்டும் நடத்தப்படவுள்ளதோடு பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் விண்ணப்பதாரர்களுக்கு தற்போது தபாலிடப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட பரீட்சார்த்தி எவருக்காவது 27.10.2021ஆம் திகதிக்கு முன் அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறவில்லையெனின் கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் 026-2220092 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.