முதலமைச்சர் வேட்பாளராக பிள்ளையான் !


 எதிர்வரும் வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற மாகாண சபைத் தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான அவர் கடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குப் பிரவேசித்திருக்கின்றார்.

இந்நிலையில் மாகாண சபைத் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளரான பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்தார்.