மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் முன்னோக்கி வருவதாக தெரிவிப்புவங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்கம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடல் முன்னோக்கி வருகிறது மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் மீனவர்களின் தங்குமிடம் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடும் பகுதிகளை கடல் அலைகள் சூழ்ந்துள்ளதுடன் போக்குவரத்து மேற்கொள்ளும் பாதைக்கு அருகாமையில் கடல் அலை வந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளதாக மினவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு இழுத்துச் செல்வதுடன் கடலின் அலை அதிகம் வருவதால் மீனவர்களின் அன்றாட தொழில் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.