இலங்கைக்கு உதவி செய்ய முன்வந்தார் விஜய்காந்த்



இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் முன் வந்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை டுவிட்டரில் இன்று விஜயகாந்த் வெளியிட்டுள்ளார்.அதில் கூறி இருப்பதாவது:

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தே.மு.தி.க. சார்பில் முதல்அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மக்களுக்கு உதவிகள் செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட மு.க.ஸ்டாலின் தி.மு.க. சார்பில் ரூ. 1 கோடி நிதி வழங்கப்படும் எனவும், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்குவார்கள் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் விஜயகாந்த் இலங்கை மக்களுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார்.