(பாறுக் ஷிஹான்)
மின்சார சபை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.
இலங்கை மின்சார சபை கல்லடி காரியாலயத்தில் கடமையாற்றும் 57 வயதான நுகர்வோர் ஒருங்கிணைப்பாளர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
வெள்ளிக்கிழமை (27) அதிகாலை பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தூக்கில் தொங்கியவரை மீட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.எனினும் தூக்கில் தொங்கியவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலை தகவல்கள் குறிப்பிட்டன.
பின்னர் உயிரிழந்தவர் உடல் கூற்று விசாரணையின் படி கழுத்து பகுதி சுருக்கினால் இறுகியதால் மூச்சு திணறி இறப்பு சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்








.jpeg)

.jpeg)


.jpg)