கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை கட்டி அணைக்கும் ஹிருணிகா


கொழும்பில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் கடமையில் ஈடுபட்டிருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை கட்டி அணைத்துள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான சமகி வனிதா பலவேகய குழுவினர் கொழும்பு 07, தேர்ஸ்டன் கல்லூரிக்கு எதிரே உள்ள வீதியில் ஒன்று கூடினர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை முன்வைத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டம் நிறைவடைந்ததையடுத்து, பிரதமரின் இல்லத்திற்கு செல்வதை தடுக்கும் வகையில் கடமையில் ஈடுபட்டிருந்த சில பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஹிருணிகா பிரேமச்சந்திர கட்டி அணைத்துள்ளார்.