பெட்ரோல் பவுசரில் இருந்து எடுக்கப்படவில்லை ! நடந்தது இதுதான் ! காணொளி தொடர்பில் பவுசர் உரிமையாளரின் விளக்கம்


கல்முனை  பவுசர் கொழும்பு வெள்ளவத்தை மரைன் ட்ரைவ் பகுதியில்  வைத்து வீதியில் கலனில் கார் ஒன்றிற்கு  பெட்ரோல் வழங்கும் காணொளிகள்  சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது . 

இது தொடர்பில்  கல்முனை திலகா எரிபொருள் நிரப்பு நிலையத்தினரின்  விளக்கம் ,

திலகா எரிபொருள் நிரப்பு  நிலையத்திற்கு சொந்தமாக 4 பவுசர்கள் உள்ளது.  தற்போது வாடகைக்கு ஓடிக்கொண்டிருக்கின்றன 

அதில் ஒன்றில் திருகோணமலையில்  வாங்கிய பெற்றோலை  கொழும்பில் வசிக்கும்  குறித்த பவுசர் உரிமையாளரிற்கு வழங்குவதற்காக வீதியில் நிற்பாட்டி கொண்டுவந்த கலனை ஊழியர் வழங்கியிருந்தார் .  
குறித்த பவுசரில் டீசல் தான் இருந்துள்ளது மேலும் பவுசர்  சீல் உடைக்கப்படவில்லை என தெரிவித்தனர்