வீட்டுத்தோட்டங்களை நிர்மாணிக்கும் உத்தியோகபூர்வ வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது சுற்றாடல்துறை அமைச்சு!



வீட்டுத்தோட்டங்களை நிர்மாணிக்கும் உத்தியோகபூர்வ வேலைத்திட்டத்தை, சுற்றாடல்துறை அமைச்சு ஆரம்பித்துள்ளது.

அமைச்சு வளாகத்தில் அண்மையில் நடந்த இந்நிகழ்வில், அமைச் சர் நஸீர் அஹமட், அமைச்சின் செயலாளர் அனில் ஜெயசிங்க உள்ளிட்ட மிக முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மரக்கன்றுகளை நட்டுவைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் நஸீர் அஹமட். இதையடுத்து, ஏனைய அதிகாரிகளாலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. வீட்டுத்தோட்டதிட்டங்களை ஊக்குவிக்கும் பொருட்டு மரக்கன்றுகள் மற்றும் விதைகளும் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

இந் நிகழ்வின் இன்னுமொரு விஷேட நிகழ்வாக சிரமதானமும் இடம்பெற்றது. நிலங்களை துப்புரவு செய்து, பயிரிடுவதற்கேற்ப பண்படுத்தப்பட்டது.
இதில், இராணுவத்தினரின் சுற்றாடல் பிரிவு பகுதியினர் கலந்துகொண்டன ர்.

உணவுப்பஞ்சத்தை எதிர்கொள்ளல், வரண்ட நிலங்களை வளமுள்ளதாக்கல் போன்ற நோக்கில், ஜூன் (17) பஞ்ஞத்துக்கு எதிரான தினமாக கொண்டாடப்படுகிறது. வருடாந்தம், ஐ.நாவால் இத்தினம் அனுஷ்டிக்கப்படு கிறது.இத்தினத்தை அனுஷ்டிக்கும் வகையிலேயே,வீட்டுத்தோட்டங்களை நிர்மாணிக்கும் திட்டத்தை சுற்றாடல் துறை அமைச்சு அமுல்படுத்தியுள்ளது.