வீட்டில் வைத்திருந்த பெற்றோல் தீப்பிடித்ததில் இளம் யுவதி பலி(மண்டூர் ஷமி)

கரடியநாறு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட நெல்லுச்சேனை பிரதேசத்தில் பாவனைக்கு வைத்திருந்த பொற்றோல் தீப்பிடித்ததில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய் இளம் யுவதி பலியான சம்பவம் நேற்று (22) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை வீதி நெல்லுச்சேனை பிரதேசத்தை சேர்ந்த (19) வயதுடைய நற்குணம் கஜேந்தினி என்பவரே இந்த விபத்தில் பலியானவராவார்.

ஆரையம்பதி தனியார் ஆடைத்தொழிச்சாலையில் பணிபுரிந்து வரும் குறித்த யுவதி தனது வீட்டில் மின்வெட்டு காரணத்தினால் விளக்கினை எடுத்துச்செல்லும் போது தவறுதலாக விளக்கு கீழ் விழுந்ததில் பாவனைக்காக விட்டில் வைத்திருந்த பொற்றோல் போத்தலில் தீப்பிடித்ததில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் குறித்த யுவதி வீட்டிலிருந்தவாறு மரணமானதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கரடியநாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்;.நசீர் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் உறவினர்களிடம் ஒப்படைந்தார்.மேலதிக விசாரணைகளை கரடியநாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.