பாடசாலைகளில் மதிய உணவு வழங்குவதற்காக ஒதுக்கப்படும் நிதி அதிகரிப்பு!


பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் அதேவேளையில், ஒரு மாணவருக்கு வழங்கப்படும் ரூ.30 ஓகஸ்ட் 1 முதல் ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரையில் ஒதுக்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனவும், அதனை அதிகரிக்க அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போஷாக்கு பிரிவினால் இந்த நிகழ்ச்சித்திட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் இதுவரை 7,920 பாடசாலைகளில் 1.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் பயனடைந்துள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.