என்ன வேலைத்திட்டம் என்று தெரியாமல் ரணிலை ஜனாதிபதியாக்கிய தேசபக்தர்கள்- மரிக்கார் எம்.பி!


ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதால் மட்டும் நிலையான அரசை உருவாக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.“என்ன வேலைத்திட்டம் இருக்கிறது என்று கூட தெரியாமல் ஜனாதிபதியை கொண்டு வர வாக்களித்தனர். இப்போது தான் ஜனாதிபதியிடம் சென்று கேட்கின்றனர் வேலைத்திட்டம் இருக்கிறது என்று ? இவர்கள் தான் பெரிய தேசபக்தர்கள்.

தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொண்டு, புடவைகளுக்கு பின்னால் இருக்கும் துரோகிகள் இவர்கள். இப்போது அமைச்சர் பதவியைப் பெற வெளியே வருகிறார்கள். இந்த அனைத்து கட்சி புரளியை நாங்கள் அம்பலப்படுத்துவேம். இந்த சர்வகட்சி விவகாரம் அமைச்சர் பதவி பெறும் ஊழலாக இருக்க முடியாது. நிலையான அரசு அமைந்தால், ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும். மேலும் சிவில் உரிமைகள் இருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி பேணப்பட வேண்டும்.

மேலும் ஊடக சுதந்திரம் இருக்க வேண்டும். இல்லையேல் அனைவரும் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதால் மட்டும் அது ஸ்திரமான அரசாங்கமாக இருக்காது” என மரிக்கார் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.